Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது. நேற்றுவரை  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூருக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

 

 coming Water level drops to Mettur Dam

 

 

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 107.75  அடியாகவும், நீர் இருப்பு 70.25 டிஎம்சியாகவும் இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்