Skip to main content

கோவை காந்திபுரம் - தனியார் காம்ப்ளக்ஸில் 3 பேருக்கு கரோனா தொற்று!!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
corona

 

 

கோவை காந்திபுரம் கிராஸ்கட் வீதியில் உள்ள லட்சுமி காம்ப்ளக்ஸில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளன. கோவை காந்திபுரம் கிராஸ்கட் வீதியில் லட்சுமி காம்ளக்ஸ் வணிக வளாகம் உள்ளது.

 

இந்த வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் அன்னபூர்ணா ஹோட்டல், டாய்ஸ் ஷாப், நகை கடை மற்றும், லட்சுமி காம்ளக்ஸ் வரவேற்பறை போன்றவை உள்ளன. இந்த லட்சுமி காம்ளக்ஸில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கும், லட்சுமி காம்ப்ளஸ் தூய்மை பணியாளர் ஒருவருக்கும், தரைத்தளத்தில் உள்ள மற்றொரு கடை ஊழியர் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அன்னபூர்ணா ஹோட்டலை சுற்றி தடுப்புகள் அமைத்து சுகாதார துறையினர் ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். 

 

மேலும் லட்சுமி காம்ளக்ஸ் வளாகத்தின்  தரை தளத்தில் உள்ள  நகைகடை, டாய்ஸ் ஷாப் மற்றும் சிறிய துணிக்கடை, வரவேற்பறை ஆகியவற்றுக்கும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று கிராஸ்கட்  வீதியில் உள்ள செல்வசிங் ஸ்டோர்ஸ் என்ற  டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்த 15 பேருக்கு கரோனா  தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கிராஸ்கட் ரோடு கரோனா ரோடாக மாறி விட்டதாக கோவை மக்கள் பீதியாய் சொல்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்