Skip to main content

கோவை கார் வெடிப்பு; விசாரணையை நிறைவு செய்த காவல்துறை

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Coimbatore car blast; The police have completed the investigation

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தனிப்படைகள்  அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

 

காவல்துறை இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர், டிஜிபி போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்திருந்தார். 

 

காவல்துறையின் விசாரணையில் என்.ஐ.ஏ இணைந்து விசாரணை குறித்து அவர்களிடம் கேட்டறிந்து வந்தார்கள். இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரைப் படி என்.ஐ.ஏ இந்த வழக்கை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருந்தது. தற்போது அந்த வழக்கை என்.ஐ.ஏ. எடுத்துள்ளார்கள்.

 

அதைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரணை செய்து வந்த மாநகர காவல்துறை தற்போது நிறைவு செய்துள்ளனர். அது தொடர்பாக கோப்புகளைத் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்