Published on 02/01/2023 | Edited on 02/01/2023

கடலோர மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.