2016 -17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான விடுபட்ட விவசாயிகளுக்கு 9.44 கோடி பயிர் காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 2016- ஆம் ஆண்டுக்கு 37,320 விவசாயிகளுக்கு ரூபாய் 9.44 கோடி இழப்பீட்டு தொகை மற்றும் நெல், உளுந்து, மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று 2016-17 ஆம் ஆண்டு விடுபட்ட 735 விவசாயிகளுக்கு நெல், மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு தொகை ரூபாய் 3.52 கோடியும், 2017-18 ஆம் ஆண்டுக்கு விடுபட்ட 3469 விவசாயிகளுக்கு நெல் குருவை, சம்பா, பருவத்திற்கு 5.90 கோடியும் ஆக மொத்தம் 9.44 கூடிய தொகை குமராட்சி, காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, மங்களூர், விருத்தாசலம் மற்றும் நல்லூர் வட்டார விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் மேல் விவரங்களை சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலகங்களில் சென்று கேட்டு பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.