Skip to main content

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரயில்கள்!- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையொட்டி முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


அதன்படி கோவை- தாம்பரம் இடையே டிசம்பர் 23, 25, 30 மற்றும் ஜனவரி 1,6,8,13,15,20,22,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் கோவை- தாம்பரம் இடையே பிப்ரவரி 3, 5 ஆம் தேதிகளில் இரவு 10.00 மணிக்கும், தாம்பரம்- கோவை வழித்தடத்தில் பிப்ரவரி 4,6 ஆகிய தேதிகளில் மாலை 06.00 மணிக்கும் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தாம்பரம்- கோவை இடையே டிசம்பர் 24,26,31 மற்றும் ஜனவரி 2,7,9,16,21,23,28,30 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

CHRISTMAS, NEW YEAR FESTIVAL SPECIAL TRAINS ANNOUNCED SOUTH INDIAN RAILWAY


நெல்லை- தாம்பரம் இடையே ஜனவரி 2,9,23,30 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதியில் இரவு 09.00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. தாம்பரம்- நெல்லை இடையே ஜனவரி 3,17,24,31 மற்றும் பிப்ரவரி 7 ஆம் தேதியில் இரவு 07.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை- தாம்பரம் இடையே டிசம்பர் டிசம்பர் 22, ஜனவரி 5,12,26, பிப்ரவரி 2 ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம்- நெல்லை இடையே டிசம்பர் 30, ஜனவரி 6,20,27, பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் மாலை 04.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 

இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு நாளை (30.11.2019) காலை 08.00 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்