Skip to main content

கரோனா வைரஸ் எதிரொலி... முன்னெச்சரிக்கையாக அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் சுகாதார துறை...!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. 

 

corona virus fear - Health Department Precaution

 



குறிப்பாக இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று கோவை உட்கடம் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். 

கேரளாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கோவை வழியாக தமிழகம் வந்துவிடுமோ என்கிற எச்சரிக்கையோடும், பாதுகாப்பு கருதியுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.  பேருந்துகள் கழுவப் படுதலைக் காணும் கோவை மக்கள் பெரும் அச்சம் படிந்த முகங்களோடு அதைப் பார்த்து செல்கின்றனர்.


 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாநகராட்சி குடிநீர் குழாயில் எலும்புத்துண்டு, இறைச்சி கழிவு; ஆய்வில் ஷாக்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A piece of bone, meat waste in the municipal drinking water pipe; Shock in the study

குடிநீர் விநியோகம் செய்யும் குழாயிலிருந்து எலும்புத் துண்டுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வெளியானது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

கோவை மேட்டுப்பாளையம் 21வது வார்டு கொண்டையூர் பகுதி குடியிருப்பில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாகவே தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். எதனால் குடிநீரில் துர்நாற்றம் வருகிறது என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்க கட்டப்பட்ட தொட்டியில் இருந்து கீழே வரும் குடிநீர் குழாய்களை குழி தோண்டி மாநகராட்சி அதிகாரிகள் பார்த்த பொழுது அதில் எலும்பு துண்டுகளும் இறைச்சி கழிவுகளும் வந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒருவேளை குடிநீர் தொட்டியில் பறவை ஏதேனும் விழுந்து உயிரிழந்து அதன் எலும்புகள், இறைச்சி கழிவுகள் குழாயில் வெளியேறியதா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மாநகராட்சி குடிநீர் விநியோகத்தில் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வந்தது 21வது வார்டு கொண்டையூர் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

நடு சாலையில் காரை வழிமறித்து தாக்குதல்; கொள்ளை முயற்சி தொடர்பான பகீர் வீடியோ

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Attack by overtaking a car in the middle of the road; Bagheer video related to robbery attempt

கோவையில் நடு சாலையில் காரை மறித்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மதுக்கரை எல்என்டி பைபாஸ் அருகே இரவு நேரத்தில் கேரள பதிவெண் கொண்ட காரை நடுசாலையிலேயே கார் ஒன்று வழிமறித்து நின்றது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் சிலர் வழிமறிக்கப்பட்டு நின்ற வானகத்தில் இருந்தவர்களை கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.

மர்ம நபர்கள்  தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காட்சிகள் காரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. கார் டிரைவர் துணிச்சலாக செயல்பட்டதால் கொள்ளையர்களின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் நடக்கும் சம்பவம் போன்றே கோவையில் நிகழ்ந்த சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.