Published on 13/02/2019 | Edited on 13/02/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை டாப்சிலிப் பகுதியில் கொண்டு சென்றுவிடப்பட்ட காட்டுயானை யானை சின்னதம்பி 100 கிலோமீட்டர் கடந்து உடுமலை பகுதியை அடைந்தது. திருப்பூர் உடுமலை பகுதியில் சுற்றித் திரியும் சின்னதம்பி தற்போது கண்ணாடிபுதூரில் தஞ்சமடைந்துள்ளது.
இந்நிலையில் சின்னத்தம்பி தற்போது உணவுக்காக திண்டாடி வருகிறது. போதிய உணவு கிடைக்காததால் தென்னந்தோப்பில் உள்ள மரங்களை சாய்த்து குருத்து மற்றும் ஓலைகளை உணவாக சாப்பிட்டு வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்து வருகின்றனர்.