முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிஜிபி ராஜேந்திரன் அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்தார்.
குட்கா ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் ராஜேந்திரன், குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவின் பெண் உதவியாளர், குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள், பினாமிகள் வீடுகளில் இன்று சோதனை நடந்து முடிந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் எடப்பாடி பழனிசாமியை டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்தார். தற்போது அந்த சந்திப்பு நிறைவுபெற்றது.