கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜோதி லட்சுமி பத்ரா என்ற சாரணியர் மாணவிக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கினார்.

சகோதரத்துவம், அன்பு, சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சாரண சாரணியர் இயக்கத்தின் மூலமாக 2018-19 கடலூர் மாவட்டத்திற்காக ராஜ்ய புரஷ்கார் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனிருந்து மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியின் சாரண ஆசிரியை ஜெயந்தி, கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், சிதம்பரம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் மோகன், பள்ளியின் தாளளர் வீன்ஸ் குமார்,பள்ளியின் முதல்வர் ரூபியாள்ராணி உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
