











வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய ஜோடி.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் நான்காவது நாளாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், போராட்டக்களத்தில் சாஹின்ஷா- சுமையா என்ற இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. மணமேடையில் மணமகன் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி வேண்டாம் என்ற வாசகத்தை ஏந்தி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, "இன்று திருமணம் நடத்த ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்தது என்றும், தற்போது சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்த தம்பதிகள் பங்கேற்றிருப்பதால், திட்டமிட்டப்படி இங்கேயே திருமணம்" நடைபெற்றதாக கூறினர்.