நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த நிலை தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, ‘நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த நிலை, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில், நவம்பர் இரண்டாம் வாரமான 7ஆம் தேதி 11 தேதி தமிழகத்தில் மிக கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நவம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையில் டானா புயல், உருவாகியிருந்தாலும் கூட தமிழகத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. ஆனால், இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.