Published on 18/12/2020 | Edited on 18/12/2020
சாதிவாரி கணக்கெடுப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
2021- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தக்கோரி வழக்கறிஞர் ஆனந்த்பாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (18/12/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது சாதி வாரியான கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும்? போராட்டங்கள் மூலம் எதையும் அடைந்துவிட முடியாது' எனக் கருத்து கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.