Heart-wrenching ''Last Second''-Viral video

குன்றக்குடியில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கோவில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள சண்முக பெருமாள் கோவிலில் சுப்புலட்சுமி என்ற யானை இருந்தது. இந்நிலையில் யானை மண்டபத்தில் திடீரென ஏற்பட்ட தீபத்தில் யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த யானையை மீட்டு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது.

Advertisment

Heart-wrenching ''Last Second''-Viral video

யானையின் உயிரிழப்புக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பக்தர்கள் மற்றும் பகுதி மக்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவில் யானை மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக நேற்று குன்றக்குடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தீவிபத்தில் சிக்கிய சுப்புலட்சுமி யானை நிலைகுலைந்து உயிரிழக்கும் இறுதி நொடி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதயத்தைக் கனக்க வைக்கும் அந்த காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.