Skip to main content

“உலகில் உள்ள எந்த மருத்துவமனையிலும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்” - ஜெ. மரண அறிக்கை குறித்து ஆறுமுகசாமி பதில்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

“Check in any hospital in the world” J. Arumugasamy's response to the death report

 

கோவை வக்கீல் சங்க அரங்கில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடனசபாபதி படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி பங்கேற்றார்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீங்கள் கொடுத்த அறிக்கையை எங்கு பரிசோதிப்பது என சில வழக்கறிஞர்கள் என்னிடம் கேட்கின்றனர். மறையும் போது ஜெயலலிதாவின் வயது 68. அவரின் உயரம் 5 அடி. எடை 100 கிலோ. 

 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு இருந்த சர்க்கரையின் அளவு 228 மி.கி., ரத்த அழுத்தம் 160 இருந்தது. கிரியாட்டின் 0.82 இருந்தது. இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் கேள்வி. இதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். 

 

கணினியில் இதுகுறித்து எழுதுங்கள். இதேபோல் ஒருவர் உயிருடன் இருப்பது போல் மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையிலும் கேட்டுப் பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்பதை வைத்து இந்த ஆய்வின் அறிக்கையை நீங்களே பரிசோதனை செய்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்