விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் உருவாகும் நீர்வரத்தை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் கைகான் வளவு திட்டத்தை ரூபாய் 7.5 கோடியில் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழகத்திலேயே கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அமைந்துள்ள சூழலில் புதிய நீர் மேம்பாட்டு திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் கொண்டு வர திட்டமிட வேண்டிய அரசு தற்போது இயற்கையாக அமைந்துள்ள நீர்வழி பாதையை மாற்றி கல்வராயன் மலை மற்றும் கோமுகி அணை பாசன விவசாயிகளின் விளைநிலங்களை தரிசாக்கும் அவலத்தை போக்க தொடர் போராட்டங்களை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர்கள், பழங்குடி சங்கங்களும், பாசன விவசாயிகள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக இன்று கல்வராயன் மலை ஒன்றியம் வெள்ளிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் ஏ.வி.சரவணன், விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் கே.எஸ்.அப்பாவு, ஆர்.வேல்முருகன், இரா.கஜேந்திரன்,மாதர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆ.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத்துணை செயலாளர் ஆர்.சின்னச்சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆர்.சடையன், மாநிலக்குழு உறுப்பினர் சி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க சமரசமற்ற போராட்டங்கள் தொடரும் என்கிறார்கள் சிபிஐ தோழர்கள்.