சென்னை அபிராமிபுரம் சிங்கேரி மடசாலையில் வாகனசோதனையில் ஈடுபட்ட போலீசார் தலையில் ஹெல்மட்டுடன் வந்த பாஸ்கரன் என்ற நபரை பிடித்து சாதாரணாமாக விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் பதிலளித்த அந்த நபரை தொடர்ந்து விசாரித்து அவருடைய புகைப்படத்தை பேஸ் ட்ராக்கர் எனவும் செயலியில் பொருத்தி பார்க்கும் பொழுது அவர் பலநாட்களாக தேடப்பட்டுவந்த தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் என தெரிவந்தது.
மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முதலில் அசோக்நகர்,கோடம்பாக்கத்தில் மட்டும் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் பிறகு இதனால் சொகுசு வாழ்க்கை உல்லாசம் என அனுபவித்துவந்ததால் இதையே தொழிலாக கொண்டு ராயபேட்டை,மயிலாப்பூர், அபிராமிபுரம் என தனது எல்லையை நீட்டிக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டான். சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க விதவிதமான ஹெல்மெட்டுகளை பயன்டுத்தியதாகவும் கூறியுள்ளான். மேலும் செயின் கொள்ளையில் கூட்டாளி வைத்துக்கொண்டால் அவர்களின் மூலம் மாட்டிக்கொள்ள நேரிடும் என யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் தனி ஒரு ஆளாகவே செயின் கொலையில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவனிடம் இருந்து 50 சவரன் நகை பறிமுதல் செய்யப்ட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த செயின் பறிப்பு கொள்ளையனை பிடித்த துணை ஆய்வாளர் கண்ணதாசனையும், மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் தலைமையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.