இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அரசு யோசனை செய்து வருகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரின் செல்போன்களில் முதன்மையாக ஆக்கிரமித்திருப்பது வாட்ஸ்அப் தான். இதில் தற்போது மெசேஜ், ஆடியோ கால், வீடியோ கால் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இதனால் வாட்ஸ் ஆப்பில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்கம் யோசனை செய்து வருகிறது.
ஏனெனில் இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்களில் ஈடுபடுபவர்கள் வாட்ஸ்ஆப் செயலியை அதிகம் பயன்படுத்துவத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நேரத்தில் பயங்கரவாதிகள் தங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கூட்டாளிகளுக்கு வாட்ஸ் அப் மூலமே தெரிவித்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது சமூக வலைத்தளங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அரசு யோசனை செய்துள்ளது.