Skip to main content

’காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது’ : ரஜினிகாந்த் கருத்து

Published on 16/02/2018 | Edited on 16/02/2018
rajini twiter

 

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், காவிரி நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என கூறியுள்ளது.  இத் தீர்ப்பு கர்நாடகாவின் அத்துமீறலுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகும். காவிரி கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமே சொந்தம் என்று இருமாப்புடன் கூறி வந்த நிலையில் இந்த தீர்ப்பு வறண்டு கிடந்த காவிரியை கண்டு வாடிப்போய் கிடக்கும் தமிழக விவசாயிகளின் உச்சியை குளிர வைக்கும் தீர்ப்பு என்று  மகிழ்ச்சியை தந்தாலும், கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் 14.75 டி.எம்.சி. தண்ணீர் தற்போது குறைத்து திறந்தவிட உத்தரவிடப்பட்டுள்ளது ஏற்கத் தக்கதல்ல. தமிழகம் 264 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கோரி வழக்கில் கேட்டிருந்தது. ஆனால் இப்போது 177.25 டி.எம்.சி. மட்டுமே கிடைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

 

தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனினும் காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அழுத்தமான உத்தரவு ஓரளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் காவிரி தீர்ப்பு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  டுவிட்டரில் ஜனவரி 13ம் தேதி அன்று ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து, ஜனவரி 26ம் தேதி என்று குடியரசு தின வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த், இன்று(16.2.2018) காவிரி தீர்ப்பு குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு:

’’காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்