வீடுகளை அலங்கரிக்கும் பிரம்புபொருட்களை தயாரிக்கும் தொழிலாளிகள் பல்லாண்டுகாலமாக பாடுபட்டாலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராமல் பரிதாபச் சூழலே நிலவுகிறது. ஒவ்வொரு பொருளும் செய்வதில் கூலித்தொகை மட்டுமே மிஞ்சுவதாக அத்தொழிலில் ஈடுபடுவோர் கலக்கத்தோடு தெரிவிக்கின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஊர் தைக்கால். அங்கு பல சமுகத்தினர் வசித்துவந்தாலும், இஸ்லாமியசமுகத்தவர்களே அதிகம். அவர்களின் பிரதான தொழில் பிரம்புத்தொழிலே. டைனிங்டேபில், நாற்காலிகள், மேசைகள், சோபாசெட், ஊஞ்சல்கள், பிரோக்கள், அரிசிகூடை, பூஜைக்கூடை என பலவகையில் அழகழகான பொருட்களை செய்துவருகின்றனர். அதுதா ன்பெரும் பணக்காரர்கள் பலரது வீடுகளை அளங்கரிக்க செய்கின்றனர்.
சாலை நெடுகிலும் விதவிதமான பெரம்பு பொருட்கள் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது. ஒரு கடையினுள் நுழைந்து பிரம்பு பொருள் எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க முடிந்தது. ஒரு சின்னவிளக்கு, நிறையவகையானஆணிகள், பிரம்பும் அறுக்கும் அரம். அதோடு சுத்தியலும் கிடந்தது. ஒரு பிரம்பை எடுத்து தீயில் காட்டுகின்றனர். அது சற்று நெகிழ்ந்து அவர்கள் தேவைக்கேற்ப வளைத்தவடிவத்தில் அப்படியே இருக்கிறது, பின்னர் மீண்டும் தீயில் காட்டி வளைக்கின்றனர். இப்படியே தேவைக்கு ஏற்பவளைத்து, நெளித்து ஆணியைகொண்டு அடித்து, கயிறை கற்றி விறு விறுவென்று ஒரு சேரை உருவாகினர். இப்படி ’’ஒரு நாள் ஒரு ஆள் மூன்று சேர் செய்யமுடியும். ஏழு பேர் சேர்ந்து ஒரு சோபா செட்டை தயாரிக்கமுடியும் என்கிறார் ஒருவர்.
பெரம்பு பொருட்கள் தொழிலில் கால்நூற்றாண்டாக இருக்கும் ஜெலில் நம்மிடம் கூறுகையில், ‘’ மூன்று தலைமுறைக்கு முன்னாடி 4 குடும்பம் சொந்தத்திற்காக கொள்ளிட கரையில் இருக்கும் நானலை கொண்டும், ஒயர்களை கொண்டும் நாற்காலிகள் செய்தனர், பிறகு பிரம்பால் செய்யத்துவங்கினர். அவர்களின் வாரிசுகள் கற்றுக்கொண்டு தொழிலை பெருக்குவதற்கு பல தொழிலாளைகளை உருவாக்கினர். அப்படி உறுவானது தான் தற்போது இந்த ஊர். இன்று இந்த ஊரே பிரம்புதொழிலைநம்பியே இருக்கிறது, இங்கிருந்து தயாரிக்கும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு செல்கிறது. இங்கு 130 கடைகள் இருக்கிறது 180 குடும்பம் 600 க்கும் அதிகமானோர் தொழிலில் ஈடுபட்டுவருகிறோம்.
ஒரு காலத்தில் இந்த தொழிலுக்கு மதிப்புமறியாதை இருந்தது, இன்றைக்குஅது குறைந்துபோச்சி, அதோட ஜி,எஸ்,டிவரியால் மொத்த தொழிலும்படுத்துப்போச்சு. ஒரு நாற்காலியை முன்னாடி 1200 ரூபாய்க்கு கொடுத்தோம், ஆனால் இன்று 1600 க்குகொடுக்க வேண்டியிருக்கு. எங்களுக்கே கஸ்டமாஇருக்கு. அதனால் தரம்குறைத்தா ஊரின்பெருமை அழிந்துவிடும், இன்று சிலர் தொழில்தெரியாமலேயே தொழிலாளர்களை மட்டுமேநம்பி நடத்துபவர்கள் மூன்றாம், நான்காம் தரம்கொண்ட பிரம்புகளைகொண்டு தயாரித்துகொடுக்கலாம். அது லைப்இருக்காது, ஒரு சேருக்குபெரம்பு ஆள்,ஆணி,ஒயர், வார்னிஸ்னு 1100 ரூபாய் செலவாகிடுது. எங்களுக்கு 100 ரூபாய் தான் கிடைக்கும், அது முழுசா கிடைத்தாலே போதும்னு நினைக்கவேண்டிய நிலமையாகிடுச்சி. குடும்பத்துடன் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனினும், வாழ்க்கைத் தரம் மட்டும் உயரவேயில்லை ’’ என்றனர் கலக்கத்துடன்.
நாற்காலி செய்துகொண்டிருந்த மனிதநேய ஜனநாயகட்சியை சேர்ந்த ஜமால் கூறுகையில், ‘’ அசாம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் இருந்து பிரம்பு வாங்குறோம், வாங்குற இடத்துலயும் ஜி,எஸ்டி, விற்கிற இடத்துலயும் ஜி,எஸ்,டி என வரியால் தொழில் படுத்துடுச்சி. இந்த தொழிலில் மாதத்திற்கு 20 நாட்கள் வேலைக்கிடைத்தாலே பெருசு. அதைக்கொண்டு மாதம் முழுசும் குடும்பம் ஓட்டனும். இந்த தொழிலை விட்டா எங்களுக்கு வேற தொழில்தெரியாது, ஜி,எஸ்,டி ய ஏற்றிய அரசு, பிரம்பு தொழிலுக்கு உதவ மறுக்கிறது. வங்கியில் கடன்கேட்டால் கிடைப்பதில்லை. எங்கள் தொழிலை ஆடம்பர தொழிலில் இருந்து குடிசை தொழிலுக்கு மாற்றி வரிகுறைப்பு செய்ய அரசு முன்வரவேண்டும்,’’ என்றார்.