Skip to main content

மாஹே தொகுதியை அரசு புறக்கணிப்பதாக புதுச்சேரியில் மாஹே மக்கள் பேரணி! ஆர்ப்பாட்டம்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமாக உள்ள மாஹே தொகுதிக்கு நிதி ஒதுக்கீட்டில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், அத்தொகுதி எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அப்பகுதி மக்களை அரசு புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் மாஹே பொறுப்பாளர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

 Government boycotts Mahe constituent in Puducherry.. people protest


இந்நிலையில் மாஹே பொதுப்பணித்துறையில் பணிமுடிந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை ரூ.2.20 கோடி கோருதல்,கடலோர வளைவு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஹே பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புதுச்சேரியில்  பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 Government boycotts Mahe constituent in Puducherry.. people protest


பாலாஜி தியேட்டர் அருகே திரண்ட மாஹே பகுதி மக்கள் அங்கிருந்து பேரணியாக  புறப்பட்டு காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி வழியாக மிஷன்  வீதியை சென்றடைந்தனர். அங்கு ஜென்மராக்கினி கோயில் எதிரே அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கேரள மாநில  செயலவை உறுப்பினர் சுரேந்தரன், மாஹே பகுதி செயலாளர் சுனில்குமார், பள்ளூர்  பகுதி செயலாளர் சுரேந்திரன், தலச்சேரி செயலாளர் பவித்ரன், வடக்கன்  ஜனார்த்தனன், புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு  உறுப்பினர் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது  மாஹே பிராந்தியத்தை புறக்கணித்தால் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டத்தில்  ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

25 மீனவர்கள் கைது; காப்பாற்றக்கோரி மண்டியிட்டு கதறி அழும் பெண்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
25 fishermen arrested; Women who kneel and cry to be saved

அண்மையாகவே தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மிக அண்மையில் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது 25 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

25 fishermen arrested; Women who kneel and cry to be saved

தொடர்ந்து ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவது அந்த பகுதி மீனவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கும் நிலையில் இன்று  இலங்கை கடற்படை 25 மீனவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்திருப்பதாக வெளியான செய்தி அந்த பகுதி மக்களுக்கு மேலும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி கண்ணீர் விட்டு மண்டியிட்டு அழுதபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மீனவ அமைப்புகள் இன்று பாம்பன் வட கடல் பகுதியில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

தமிழக அரசைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/06/2024 | Edited on 25/06/2024

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அவலத்திற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கூறி அரசைக் கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக  இன்று கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்.