Published on 10/10/2024 | Edited on 10/10/2024

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கே லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவத்தில் ஆர்டிஓ அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்துவது குறித்து முன்கூட்டியே லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவிக்க வேண்டும் என சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சதாசிவம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள ஆர்டிஓ சதாசிவம் வீட்டில் நடத்திய சோதனையில் பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. சதாசிவம் பெயரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்தும் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.