Skip to main content

'பவானிசாகர்' அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

bhavani sagar dam opening tamilnadu cm order


பவானிசாகர் அணையை நாளை (06/06/2020) முதல் ஜூன் 15- ஆம் தேதி வரை பாசனத்திற்கு தொடர்ந்து திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 01-02-2020 முதல் 120 நாட்களுக்கு 7776 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அணையிட்டிருந்தேன். 
 

 

bhavani sagar dam opening tamilnadu cm order


தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து 06-06-2020 முதல் 15-06-2020 முடிய 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.29 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட அணையிட்டுள்ளேன். 


இதனால் ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்