
ஒமிக்ரான், கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ளன. எனினும், புதுச்சேரியில் நிபந்தனைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக 31-ஆம் தேதி சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகளை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில், கேளிக்கை நிகழ்ச்சி, டி-ஜே இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.