Published on 04/06/2020 | Edited on 04/06/2020
சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் 8 வழி சாலை திட்ட மேலாளர் மனு செய்துள்ளார்.
8 வழி சாலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களாக மேல்முறையீட்டுமனு நிலுவையில் இருப்பதாகவும், அதனால் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை நடத்தவேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதனை தடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.