Skip to main content

கொட்டி தீர்த்த மழை; நீரோடு நீராகக் கழிவுநீரைத் திறந்துவிட்ட தொழிற்சாலைகள்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
balaru  river forming with wastewater released from industries using the heavy rain

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியிலுள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாகவும். இதனால் ஆற்று நீர் முழுவதும். வெள்ளை நிறத்தில் நுரை தலும்பியபடி காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து ஏற்கெனவே விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில்  திறந்து விடும் தோல் தொழிற்சாலைகளுக்கு  சீல் வைத்தும் மின் இணைப்பை தூண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டு கொள்ளாத சில தொழிற்சாலை நிர்வாகம் மழைக்காலங்களில் இரவு நேரத்தில் தோல் தொழிற்சாலை கழிவு நீரை நேரடியாக பாலாற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் பாலாற்றில் செல்லும் மழை வெள்ள நீரில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து வெள்ளை நிறத்தில் நுரை ததும்பி செல்வதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு
வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

balaru  river forming with wastewater released from industries using the heavy rain

இதேபோல் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த மாதம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சில தொழிற்சாலைகள் கழிவு நீரை நேரடியாக பாலாற்றில் திறந்து விட்டதால் வெள்ளை நிறத்தில் ததும்பியபடி சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாலாற்றில் கழிவுநீர் திறந்து விடுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்வதற்கும் குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள்  அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்