முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தொகுதியில் , 20 ஆண்டுகளுக்கு முன் பேருந்தின் மீது கல்வீசிய வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தனது விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அத்தொகுதியை காலித்தொகுதி என அறிவித்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18 ம்தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக, திமுக, அமமுக, என போட்டிகளில் களம் காணும் நிலையில், தான் மீண்டும் தேர்தலில் போடியிட முடியாத நிலையில் களத்தில் தன் மனைவி ஜோதியை நிற்கவைத்தார். இதில் சும்மா ஒன்றும் அவர் மனைவியை களத்தில் நிறுத்தவில்லை. அதிலும் உள்ள நோக்கத்தோடுதான் செயல்பட்டார்.
அந்த நோக்கமானது முதல்வரிடம் சில கட்டுபாட்டை ஒப்புதல் வாங்கிக்கொண்டு தன்னுடைய மனைவிக்கு சீட் கொடுத்து அதில் வெற்றிபெற்றால் அதே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை என் மனைவிக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான். இந்த நிலையில் தான் விளையாட்டுத்துறை அமைச்சர் பதிவியை மற்றவர்களுக்கு கொடுக்காமல் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு கூடுதலாக கொடக்கப்பட்டதின் நோக்கமும் அதுதான்.
அதிமுக, திமுக , அமமுக, சிவசேனா, மற்றும் சுயாட்சியாக நான்கு வேட்பாளர்கள் என ஓசூர் இடைத்தேர்தலில் களம் காணும் நிலையில் தான் வெற்றிவாகையை சூட தனது ஆட்டத்தை தொடங்கினார் பாலகிருஷ்ணரெட்டி. அது என்னவென்றால் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் என்பதுதான். இதில் கூட்டுறவு தலைவர், முன்னாள் பஞ்சாயத்துதலைவர், ஒன்றிய செயலாளர், கிளைப்பொருப்பாளர் என இவர்கள் மூலமாக பணம் பட்டுவாடா செய்யச் சொல்லி ரெட்டி கொடுத்துள்ளார்.
தற்போது பணத்தை கொடுக்க சொன்னவர்களிடமே பாலகிருஷ்ணரெட்டி பணத்தை திருப்பி வாங்கச்சொன்னதாக பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது. சரியாக பணத்தை மக்களிடத்தில் கொடுக்காமல் இவர்களே சுருட்டிக்கொண்டதாகவும், மக்களுக்கு சரியாக பணத்தை கொண்டு சேர்க்காமலே தாங்கள் பணத்தை கொடுத்ததாக ரெட்டியிடம் கணக்கு காட்டியுள்ளனர்.
இந்த விசயம் ரெட்டிக்கு தெரியவர மிகுந்த கோவத்திற்கு உள்ளாகியுள்ளார். உங்களை நம்பி கொடுத்தால் இப்படி செய்துவிட்டீர்களே என்றும் கொடுத்ததை திருப்பி கொடுங்க என்று பிரச்சனை வெகுவாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பணத்தைவிட, அதிமுக வெற்றியை விட, தன் பதவி பறிபோகிறதே என்ற அச்சத்தில் ரெட்டி மனம் உடைந்துள்ளார் என்று தகவல்.