Skip to main content

சீரான உடல்நிலையில் கலைஞர் - காவேரி மருத்துவமனை அறிவிப்பு

Published on 29/07/2018 | Edited on 29/07/2018
da

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கலைஞரின் இதயத்துடிப்பு 94 ஆக உள்ளது.(இயல்பு 60-100) ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 97 ஆக உள்ளது ( இயல்பு 94-99). 

 நிமிடத்திற்கு சுவாச அளவு 30 முறை.( 80 வயதுக்கு மேல் இயல்பு நிலை 10.30. )  என்று தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரியாணி கொடுக்க குப்பை வண்டியில் ஆட்களை அழைத்து வந்த மாநகராட்சி ஊழியர்கள்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Corporation employees who brought people in a garbage truck to give biryani

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளையும் பிரியாணியும் வழங்கினார்.

பிரியாணி வாங்குவதற்கு பெரிய அளவில் ஆட்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் மாநகர எம்.எல்.ஏ கார்த்தி, துணை மேயர் சுனில் ஏற்பாட்டில்  ஏரியாக்களில் இருந்து ஏழை மக்களை அழைத்துவந்தனர். அப்படி வந்தவர்களை வேலூர் மாநகராட்சி குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டனர் மாநகராட்சி ஊழியர்கள். அரசு வாகனத்தில் அதுவும் குப்பை வண்டியில் பொதுமக்களை ஏற்றி வந்தது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது

Corporation employees who brought people in a garbage truck to give biryani

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கச் செல்லும் பொழுது பணம், பிரியாணி, வாட்டர் பாட்டில், சரக்கு எனத் தந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மக்களை அழைத்து வந்த இதே. நபர்கள். இப்போது ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு இப்படி குப்பை வண்டியில் ஏற்றி வருகிறார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

“கலைஞர் இருக்குற வரைக்கும் எவனும் இங்க வாலாட்ட முடியல” - பிரகாஷ் ராஜ் 

Published on 01/06/2024 | Edited on 06/06/2024
prakash raj about kalaingar

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அதை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அற்புதமான ஆவணப்படம். எனக்கு பேச்சே வரவில்லை. மனசு 30 ஆண்டுகாலத்துக்கு பின்னாடி போகுது. கலைஞரைப் பற்றிய பாசமும், அவரது கொள்கையைப் பற்றிய புரிதலையும் உள்வாங்கியவர்களால் மட்டும் தான் இது போன்ற பதிவை பதிவு செய்ய முடியும். இருவர் படம் நடிச்சு 28 வருஷம் ஆச்சு.  

இன்றைய தொழில்நுட்பத்தில் கலைஞருடைய நியாபகங்களை, அவருடைய பேச்சுக்களை மீண்டும் கேட்பது மாதிரி பதிவு, அற்புதமான ஒன்று. அவராக நடிக்க இருவர் படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது மகிழ்ச்சி. அவரை சந்திப்பதற்கு முன்னாடி அவரை மாதிரி வாழ்ந்தது போல் ஒரு ஃபீல். கிட்டதட்ட இரண்டு வருஷம் அவரைப் பற்றி படிச்சேன். நான் கர்நாடகாவிலிருந்து வந்தவன். அதனால் அவருடைய அந்த தமிழ் உச்சரிப்பு கத்துக் வேண்டும். அந்த தமிழை கத்துக்க கத்துக்க, அந்த மொழியுடைய கர்வத்துல அவருடைய அற்புதமான கொள்கைகளும், அவருடைய வாழ்க்கையின் பயணங்களும் என்னால் உணர முடிஞ்சது. 

ஏனென்றால் அந்த கதாபாத்திரத்தை ஒரு நடிகராக மட்டும் நடிக்க முடியாது. அந்த படத்தில் நடித்ததை விட இப்படியொரு மகானை நான் சந்திக்க நேர்ந்தது மிக முக்கியம். இன்றைக்கு நான் இப்படி பேசுவதற்கு காரணம் அப்படியொரு மனிதனை இரண்டு ஆண்டுகள் படித்தது தான் காரணம். சமீபத்தில் சாதி அரசியல் உள்ளிட்ட நிறைய அரசியல் குறித்து ஒரு பேட்டியில் பேசினேன். அப்போது நீங்க அதை பத்தி ரொம்ப பேசுறீங்கன்னு சொன்னாங்க, கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றேன். அவர் இருக்குற வரைக்கும் எவனும் இங்க வாலாட்ட முடியல. கலைஞருடைய நூற்றாண்டு விழா கொண்டாடிட்டு இருக்கிற நாட்டுல ஒரு நூற்றாண்டின் கலைஞரை கொண்டாடிட்டு இருக்கீங்கன்னு நம்புறேன். அவர் சினிமாவில் நல்ல டயலாக் எழுதினாரு என்பதை விட அப்போதே 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது தான் முக்கியம். அடுத்த தலைமுறைக்கு கலைஞர் இருந்தார் என்ற செய்தியை விட ஏன் கலைஞர் ஆனார், அவரது வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  

தண்டவாளத்தில் தலையை கொண்டு வைத்திருக்கிறார் என்றால் எப்படியொரு நெருப்பு அவரிடம் இருந்திருக்கும். அதை மறக்கவே முடியாது. அபியும் நானும் பட ஆடியோ லாஞ்சுக்கு ஒரு நாள் முன்னாடிதான் ஃபோன் போட்டு சொன்னேன். உடனே வந்துவிட்டார். இலக்கியம், கொள்கை உள்ளிட்டவைகளை பேசுவார். நான் இரண்டு வருஷம் படித்ததை விட நிறைய விஷயங்கள் இந்த புகைப்பட கண்காட்சியில் பதிவு செய்யபட்டிருக்கு. கொள்கையை வைத்து ஒரு தலைவரானதும், மக்களின் அன்பை இன்றைக்கும் அவர் சம்பாதித்தது, ஒரு உண்மையான தலைவனுக்கான விஷயம். எங்களுக்கு அவர் வழிகட்டியாக இருக்கிறார். கலைஞரின் கொள்கை வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அது இன்னும் உயரும். எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஒரு முதல்வரே அப்படி நிற்கும் போதுதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும், நான் எங்கு சென்றாலும் எனக்கு வீடு (தமிழ்நாடு) இருக்கிறது என்று சொல்ல நம்பிக்கை இருக்கிறது. என் செல்லத்த ஒன்னும் பண்ண முடியாது. கலைஞருடைய சிந்தனை தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருக்கிறது.  நிறைய ஷூட்டிங்கில் மக்கள் வருவார்கள். கன்னியாகுமரி ஷூட்டிங்கில் மோடியே ஆடியன்ஸை கூட்டிட்டு போறார். .” என்றார்.