Skip to main content

இன்று முதல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

 Apply for medical courses starting today!

 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

 

 

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 6,958 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,925 பல் மருத்துவ இடங்கள் என மொத்தம் உள்ள 8,853 இடங்களுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 7 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கையெழுத்திடப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

குளியலறையில் ரகசிய கேமரா; வசமாக சிக்கிய மருத்துவ மாணவர்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
A medical student caught in the lurch at Hidden camera in the bathroom

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (36). இவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது வீட்டில் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.  

அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து, அந்த பெண் குளிக்கும் போது வீடியோ எடுப்பதற்காக குளியலறை அருகே ஸ்பை பெண் என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், குளியல் அறையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பேனா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அது உளவுக்கருவி என்பதும் அதில் கேமரா இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன், ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். குளியலறையில், ரகசிய கேமரா வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.