அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களிடமிருந்து மறுமதிப்பீட்டில் பேப்பருக்கு ரூ.10 ஆயிரம் பெற்று கொண்டு அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா உள்ளிட்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயக்குமார் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.