Skip to main content

ஐடியா கொடுத்த ஐஸ்வர்யா - மாட்டிக்கொண்ட சரத்குமார் - உயிர் தப்பிய கணவன்

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
Husband



திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஐஸ்வர்யா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 

கடந்த 4 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். வடிவரசு தனது 2 குழந்தைகளுடன் ராஜதானிக் கோட்டையில் வசித்து வந்தார்.
 

பெற்றோர் வீட்டில் தங்கியுள்ள ஐஸ்வர்யா திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பர்த்து வருகிறார். அப்போது அந்த மில்லில் வேலை பார்த்த சின்னாளப்பட்டி அடுத்துள்ள கோட்டைப் பட்டியைச் சேர்ந்த சரத்குமார் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கூடா நட்பாக மாறியது. 
 

இதனை அறிந்த வடிவரசு, மாமனார் வீட்டிற்கு சென்று ஐஸ்வர்யாவை கண்டிக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து சரத்குமாரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக பழகி வந்த விபரம் தெரிய வரவே அடிக்கடி ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி சத்தம் போட்டார்.
 

நாம் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என ஐஸ்வர்யா சரத்குமாரிடம் கூறினார். அதன்படி சரத்குமாரும் வடிவரசை கொலை செய்ய ஒத்துக் கொண்டார்.
 

வடிவரசு செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சரத்குமார், தான் ஒரு வீடு கட்டப் போவதாகவும், அதைப்பற்றி பேச வேண்டும் கூறி, அவர் வந்தவுடன் சாதிக் கவுண்டன் பட்டியில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
 

வீடு கட்டுவது பற்றி பேசி முடித்து விட்டு சடையாண்டிபுரம் பகுதிக்கு சென்ற இருவரும் மது அருந்தியுள்ளனர். வடிவரசுக்கு போதை தலைக்கேறிய நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவரசின் கழுத்தை அறுத்தார். உடனே அவர் சத்தம் போடவே சரத்குமார் அந்த இடத்திலிருந்து தப்பினார். 
 

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், வடிவரசை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரையும், ஐஸ்வர்யாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்