Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட கோரி 12ம் தேதி விவசாய சங்கம் போராட்டம்

Published on 07/06/2018 | Edited on 08/06/2018

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம. ஆதனூரில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. இதில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட கோரி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தகூட்டத்தில் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், ம.ஆதனூர்  சோமசுந்தரம், செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ம.ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் ஆகிய ஊர்களுக்கு இடையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 04.08.2014ம் தேதி சட்டமன்றத்தில் 110விதியின் கீழ் ரூ 400 கோடியில் கதவணை கட்டப்படும் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியை துவக்க கோரி வரும்12ம் தேதி  காலை ம. ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் போராட்டம் நடைபெற உள்ளது. கொள்ளிட கரையோர கிராமங்களில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டிய பிறகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் எடுக்க வேண்டும் என்று கோரி எய்யலூர்  கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட அலுவலகத்தை முற்றுகையிடள்ளனர்.

 

Agriculture Association Struggle on 12th


 

காவிரி நீர் பிரச்சினையில்  உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் இருக்கும் அனைத்து அணைகளும் இருக்க வேண்டும் மத்திய, மாநில அரசு இந்த  ஆண்டு குறுவை பட்ட சாகுபடிக்கு  காவிரி தண்ணீர் கிடைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் 2 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கி 24 மணிநேரமும்  மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், பாசன வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளாமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.