Skip to main content

காதலியை கொலை செய்துவிட்டு, கல்லூரி மாணவியை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது.

Published on 12/08/2017 | Edited on 12/08/2017
காதலியை கொலை செய்துவிட்டு, கல்லூரி மாணவியை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து கீழேவரும் சாலையின் ஓரத்தில் நேற்று முன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் தலையில் இரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.

அந்த வழியாக வந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், அங்கு வந்த வாழவந்தி நாடு போலீசார் அந்த பெண்ணை மீட்டு, நாமகள் அரசு மருத்துவமனிக்கு அனுப்பினர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக அப்பெண்  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அந்த பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவியான  இவரது பெயர் ஜனனி(வயது-23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு நவீன் என்ற ஐந்து வயது மகன் உள்ளார்.

ஜனனி “டால்மியா போர்டு” பகுதியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்துக்குமார் (வயது-26) என்பவரும், அதே பகுதியில் உள்ள மற்றொரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலையிலேருந்துள்ளார்.

இதன்மூலம், ஜனனியும், முத்துக்குமாரும் ஒன்றாக பேருந்தில் வேலைக்கு செல்லும்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் கள்ளகாதலாக மாறியது.  கடந்த ஆறு மாதங்களுக்கு  முன்பு, கணவர் குமாரை விட்டு பிரிந்த ஜனனி, காதலன் முத்துக்குமாருடன் தனியாக சென்றுவிட்டார்.

முத்துகுமாருடன் ஜனனி தனியாக குடும்பம் நடத்தி வந்த நேரத்தில், முத்துக்குமார் நெல்லையில் உள்ள தனது உறவினரான மணி என்பவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

அங்கே மணி வீட்டின் அருகே வசித்த தர்ஷினி (வயது-20) என்ற கல்லூரி மாணவியுடன், முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.

ஆனால், இந்த திருமணத்திற்கு முத்துக்குமாருடன் வாழ்ந்துவரும்  ஜனனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய முத்துக்குமார், நேற்று முன்தினம் ஜனனியை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மலைமேலே உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள் மாலை ஆறு மணிக்கு கீழே திரும்பும் போது, 68-வது கொண்ட ஊசி வளைவு அருகே சென்றபோது அங்கு இருந்த கட்சி முனையில் நின்று நாமக்கல் நகரை கண்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த இடத்தில் வைத்து, தான் தர்ஷினியை திருமணம் செய்துகொள்ள போவதாகவும், அதற்க்கு நீ சம்மதிக்கவேண்டும் என்று ஜனனியிடம் முத்துக்குமார் கேட்டுள்ளார். இதையடுத்து, வழக்கம் போலவே ஜனனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 இதனால், ஆத்திரம் அடைந்த முத்துகுமார் ஜனனியின் துப்பட்டாவால், அவரது கழுத்தை நெரிந்துள்ளார். ஜனனி மயங்கி கீழே விழுந்த பின்னர் அருகே கிடந்த கல்லை எடுத்து ஜனனியின் தலையிலும், முகத்திலும் குத்தியுள்ளார்.

இதனால், காயம் ஏற்பட்டு ஜனனியின் தலையில் இருந்து இரத்தம் வந்துள்ளது. அப்போது, அந்தபகுதியில் சுற்றுலா பயணிகள் காரில் வந்ததை கவனித்த முத்துகுமார். கீழே கிடந்த ஜனனியை சாலையோரம் இருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டுவிட்டு முத்துகுமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

சிறிது நேரத்துக்கு பிறகு, காட்சி முனை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சிலர் அந்த இடத்தில் கீழே பள்ளத்தில் நினைவிழந்து கிடந்த ஜனனியை பார்த்துள்ளனர்.

அதன்பின்னர், ஜனனியை மீட்டு வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வாழவந்தி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர் என்ற விபரங்கள் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நேற்று சேலம் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்



சார்ந்த செய்திகள்