![admk minister sellurraju about bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/41uCpMbWOekCAW2nP35tGYU1XDSXiqY_FoNNFvMq8OI/1598700081/sites/default/files/inline-images/ZXGVXCVCXV_0.jpg)
தேசிய கட்சிகள் எதுவாகினும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் மீது தான் சவாரி செய்ய முடியும் என அ.தி.மு.க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என ஹெச்.ராஜா கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பொதுவாக பாரதிய ஜனதாவை பொருத்தவரை வளரணும். டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியும். எனவே கட்சியை வளர்த்தெடுப்பதற்கு, அவங்க அவங்க கட்சியை முன்னெடுப்பதற்காக இப்படிச் சொல்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் தான் இங்கே கூட்டணி. தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் மீதுதான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய முடியும். எனவே, டெல்லிக்கு ராஜான்னாலும் இங்கு பிள்ளை மாதிரிதான் என்றார்.