Skip to main content

டெல்லி தடியடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்!

Published on 26/01/2021 | Edited on 26/01/2021
hk

 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் குடியரசுத் தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

 

இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியானார்.  இந்நிலையில் விவசாயிகள் மீதான தடியடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், " எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கிறார்கள்.பாசிசம், ஒற்றைக் கொள்கை, வெறுப்பு அரசியல், ஏழைகள் மீதான வெறுப்பால் கீழ்நோக்கி செல்கிறோம். போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சில கோமாளிகள் சொல்வார்கள், அவர்களை புறக்கணியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்