Skip to main content

ரஜினியின் "தர்பார்" படப்பிடிப்பு தளத்தின் மீது மாணவர்கள் கல் வீச்சு !

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் கற்களை வீசியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. "தர்பார்" திரைப்படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரி ஒன்றில் இந்த திரைப்பட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். முதன் முறையாக ஏ.ஆர். முருகதாசும் ரஜினிகாந்தும் இணைந்திருப்பது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

RAJINI DARBHAR FLIM

 

இந்நிலையில் மும்பை கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது  , அதனை அங்கிருந்த மாணவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் மாணவர்களை வெளியேற்றியதாக தெரிகிறது. மேலும் , சமந்தப்பட்ட மாணவர்கள் மீது ஏ.ஆர் . முருகதாஸ் தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் படப்பிடிப்பு தளத்தில் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டனர். கடைசியாக 1992-ல் ரஜினி போலீஸ் வேடத்தில் "பாண்டியன்" திரைப்படத்தில்  நடித்திருந்தார். 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் வேடத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெற்றியைக் கொண்டாடிய கருடன் படக்குழு (படங்கள்)

Published on 14/06/2024 | Edited on 14/06/2024

 

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அண்மையில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன்  பட சாக்ஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சூரி, சசிகுமார், டைரக்டர்  துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்,  டைரக்டர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.குமார், ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 படங்கள் : எஸ்.பி.சுந்தர் 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.