
மயிலாடுதுறை மாவட்டம் மீனவர் காலனி பூம்புகார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திங்கட்கிழமை இரவு வெளிநாடு செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு காரில் சென்றார். காரை கீழப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவர் ஓட்டிச் சென்றார். கார்த்திகேயனை விமான நிலையத்தில் விட்டுவிட்டு மற்றவர்கள் வீடு திரும்பும் போது புதுச்சத்திரம் கொத்தட்டை கிராமத்தின் அருகே வரும் போது கார் டிப்பர் லாரி மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் டிரைவர் சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த கார்த்திகேயன் மனைவி வளர்மதி, மகன் ஹரிஹரன், கார்த்திகேயன் வளர்மதியின் தங்கை வனிதா, வளர்மதியின் தாய் வெண்ணிலா, வனிதாவின் மகன் விக்ராந்த், வளர்மதியின் தம்பி பெண் லக்ஷனா ஆகிய ஆறு பேரும் படுகாயமடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் ஆறு மாதக் குழந்தை விக்ரம், மூன்று மாதக் குழந்தை லக்ஷனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்த புகாரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.