Skip to main content

திருமணம் நடைபெற இருந்த பெண் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

60 pounds jewelry stolen from house woman who was married

 

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருமண்டபம், ஆர்எம்எஸ் காலனி, அசோக் நகரில் வசித்து வருபவர் நாகலட்சுமி. கணவரை இழந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாகலட்சுமியின் உடன் பிறந்த சகோதரி பெரம்பலூரில் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு வரும் ஏழாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில்  நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இன்று காலை திருமணத்திற்கு தேவையான ஆடைகளை வாங்குவதற்காக காலை 10.45 மணிக்கு  ஆட்டோவின் மூலம் திருச்சி சின்னக் கடை வீதிக்கு வந்து விட்டு 3 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் களவு போனது தெரியவந்தது.

 

இந்த நகைகள் அனைத்தும் நாகலட்சுமி சகோதரியின் மகளின் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டது. திருமணத்திற்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் மணப்பெண்ணின் நகைகள் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆட்டோவில் பயணித்த நாகலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்துள்ள நகைகள், பட்டுப்புடவைகள், வெள்ளி பாத்திரங்கள் குறித்து சிலாகித்து பேசிக் கொண்டிருந்ததாகவும் அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்