Skip to main content

பவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Published on 18/08/2018 | Edited on 27/08/2018

 

velumani

 

 

 

தமிழக அரசின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.பின்னர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைத்தார்.பின்னர் பேட்டியளித்த அவர்,2 கோடி மதிப்பிலான அத்யாவசிய பொருட்கள் 21 லாரிகளில் கேரளாவிற்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

மேலும்  தமிழக கேரள எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் நிவாரண பணி மற்றும் மீட்பு பணிகளில்  ஈடுபடும்படியும், தேவையான மருந்துகளை அனுப்பிவைக்கும்படியும்  முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்த அவர், அனைத்து பொது அமைப்புகள், அரசு,தன்னார்வலர்கள், அதிமுக என 2 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கேரளாவில் பாலக்காடு, இடுக்கி,ஆலுவா உட்பட 14 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளதாகவும்,குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடைகள், உணவு பொருட்கள், பிரஷ்,பேஸ்ட் என 31 விதமான பொருட்கள் அனுப்பபடுகின்றது, மேலும்  கூடுதல் லாரிகளில் இன்னும் பொருட்கள் அனுப்பபட இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

 

 

 

பவானி ஆற்றின் கரையிலும், வால்பாறையிலும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில்சந்தித்து பேசியிருப்பதாகவும் கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் உடனடியாக சரி் செய்ய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் பவானி ஆற்று வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்