Published on 10/07/2022 | Edited on 10/07/2022

தமிழகம் முழுவதும் இன்று (10/07/2022) ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிப் போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 45 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள், ஆறு மாத கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என மாநிலத்தில் 1 கோடியே 45 லட்சம் பேர் உள்ளனர்.
அவர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 78 லட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.