Anbumani  said If  had won 25 constituencies, Tamil Nadu would have been included budget

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Advertisment

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம் ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே பெயர் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியா கூட்டணி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்களை ஜெயிக்க வைத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட். இந்த ரூ.48 லட்சம் கோடியில் தமிழகத்திற்கு எதுவும் வந்திருக்காதா? எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்தியாவிற்கு பொதுவானதுதான் பட்ஜெட். அப்படி இருக்கும் நிலையில் தமிழகத்திற்கு இதுதான், கேரளாவிற்கு இதுதான்.. என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெயர் சொல்ல முடியாது.

Advertisment

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் எங்களை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வந்திருக்கிறது என்பதை விரைவில் தரவுகளுடன் கூறுவோம்.” என்றார். இறுதியாகக் கூட்டணிக் கட்சி தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவோம்; பட்ஜெட்டில் எங்களுக்கும் சில வருத்தங்கள் இருக்கிறது”எனவும் தெரிவித்தார்.