Published on 18/08/2018 | Edited on 18/08/2018

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழைபொழிவால் காவேரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அணைக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 2,05,000 கனஅடி என அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு என்பது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இவ்வளவு அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 2 லட்சம் கனஅடியை தொட்டிருப்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.