Published on 24/08/2021 | Edited on 24/08/2021

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் நேற்று (23.08.2021) வெளியிட்ட அறிவிப்புகளில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 700 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்கவும், கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் வடக்கு கிராமம் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 750 கோடி மதிப்பில் 2 புதிய கதவணை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வேண்டுகோளை ஏற்று இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மத்திய மேற்கு நகரப் பொறுப்பாளர் கா. அன்பரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.