Published on 25/07/2019 | Edited on 25/07/2019
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதாலும், கர்நாடகாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் காவிரியில் நீர் திறப்பு அளவு 11,014 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேஆர்எஸ் அணையில் இருந்து 4,114 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீரும் தற்போது காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.