Skip to main content

15 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் மது பாட்டில்கள்...  தரையில் கொட்டி அழித்த போலிசார்!!

Published on 12/04/2020 | Edited on 13/04/2020


ஒரு நாளைக்கு அரசு விடுமுறை என்றாலே அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அதிகப்படியான வியாபாரம் நடந்திருக்கும். குடிமகன்கள் கூடுதலாக மது வாங்குகிறார்களோ இல்லையோ பார் நடத்துபவர்கள் மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

 

 10 thousand liquor bottles confiscated in 15 days ...

 

அந்த நிலையில் தான் ஊரடங்கு என்று அறிவித்ததும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சரக்குகளை அள்ளி வைத்துக் கொண்டனர். பல இடங்களில் டாஸ்மாக் பணியாளர்களே நள்ளிரவில் மது பாட்டில்கள் திருடி சிக்கியும் கொண்டனர். பல ஊர்களில் பார் ஓனர்களிடமே டாஸ்மாக் சாவிகளைக் கொடுத்துவிட்டே சென்றுவிட்டனர். இதனால் தடையின்றி மது விற்பனை நடந்தது விலை தான் ரொம்ப அதிகம். அதாவது ரூ. 100 க்கு விற்பனை செய்த குவாட்டர் ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டது.

 

 

 10 thousand liquor bottles confiscated in 15 days ...


மது கிடைக்காமல் மாற்று போதைக்கு மாறிய 7 பேர் இதுவரை இறந்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்ட நிலையில் ஆங்காங்கே பிடிபட்ட அத்தனை மது பாட்டில்களையும் இன்று ஒரே நாளில் கொட்டி அழிக்க உத்தரவிட்டார். மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் மதுப்பாட்டில்களை காவல்நிலையம் அருகில் மண்ணில் கொட்டி அழித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்