Skip to main content

“சீட்டு ஒதுக்கும்போது தான் தெரியும் எல்லாரும் என்ன ஆகப்போகிறார்கள் என்று...” - செல்லூர் ராஜு பேட்டி

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

nn

 

'திமுகவில் தற்போது வாய் பேசாமல் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், சீட்டு என வரும்போது என்ன ஆவார்கள் என்று தெரியாது' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'மாமன்னன் படத்தை பார்த்துவிட்டீர்களா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், 'இன்னும் பாக்கல. டைம் இன்னும் கிடைக்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன். எப்படியும் பார்த்து விடுவேன்' என்றார்.

 

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “விரைவாக மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக கார் வாங்கி இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். எங்கள் பொதுச் செயலாளருக்கு எல்லாமே தெரியும். அவர் வல்லவனுக்கு வல்லவன். அவரைப் பொறுத்த அளவிற்கு எது செய்ய வேண்டும்; எது கட்சிக்கு நல்லது; எது சிறப்பாக வெற்றியை கொடுக்கும் என்பதை தீர்மானித்து செய்வார்” என்றார்.

 

'பாஜக எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என ஓபிஎஸ் சொல்லி உள்ளாரே' என்ற கேள்விக்கு, ''அவரவர் சொல்லிக் கொள்ளலாம். எங்களுக்கு அதைப்பற்றி தெரியாது. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். இப்பொழுது கூட்டணிக்கான தருணம் கிடையாது. தருணத்திற்கு இன்னும் நாள் இருக்கிறது. கூட்டணி இப்பவே எப்படி முடிவாகும். முதலில் அங்கு இருப்பவர்கள் பெர்மனென்ட்டாக இருப்பார்களா? திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பார்களா? என்னதான் அவர்கள் வாய் பேசாமல் இருந்தாலும் சரி, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கியது சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் கூட செந்தில் பாலாஜியை கண்டிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏதாவது இருக்கிறதா? அவர்கள் ஏதாவது கண்டித்தார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதற்கு 500, 1000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ஏன் செலவழித்தார்கள் என்று கம்யூனிஸ்ட் கேட்டார்களா? புரட்சி புயல் வைகோ கேட்டாரா? யாரும் பேசவில்லை. என்னதான் பேசாமல் இருந்தாலும் சரி, சீட்டு ஒதுக்கும்போது தான் தெரியும் எல்லாரும் என்ன ஆகப் போகிறார்கள் என்று'' என்றார்.

 

'திமுக கூட்டணி நிரந்தரமாக இருக்காது என்று சொல்கிறீர்களே, உங்கள் அதிமுக - பாஜக கூட்டணி?' என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ''நாங்க ஆளுங்கட்சியாக இல்லை; நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மக்கள் பணி ஆற்றுகிறோம். செல்வாக்கு மிக்க பொதுச்செயலாளர் இருக்கிறார். அவர் பார்த்து முடிவு பண்ணுவார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்