தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி கலைஞர் அரங்கத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திருச்சி, தேனி, ஆரணி உள்ளிட்ட 16 தொகுதிகளை கேட்போம். கூடுதலாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம். அதை ராகுல்காந்தி முடிவு செய்வார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை கன்னியாகுமரி, நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறேன். இதுபற்றி ராகுல்காந்தி முடிவு எடுத்து அறிவிப்பார். இவ்வாறு கூறினார்.