தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவை ஆதரிக்கும் சிறு கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்
இந்நிலையில் அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றும் மூன்றாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவிடம் 12 தொகுதிகளையும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்று மாலை அல்லது நாளைக்குள் அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.