தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 153 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 80 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
திமுக கூட்டணியின் முன்னிலை நிலவரங்கள்:
திமுக - 119
காங்கிரஸ் - 17
மதிமுக - 4
விசிக - 4
சிபிஎம் - 2
சிபிஐ - 2
பிற கட்சிகள் - 5
அதிமுக கூட்டணியின் முன்னிலை நிலவரங்கள்:
அதிமுக - 71
பாஜக - 3
பாமக - 5
பிற கட்சிகள் - 1
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் பண்ணாரி 99,181 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுந்தரம் 83,173 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
அதேபோல், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சு.ரவி 28,054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.