தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக 'பொங்கல் சிறப்புத் தொகுப்பு' அறிவிக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்கியதில் நடந்த முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரேசனில் வழங்கப்பட்ட பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள ஓபிஎஸ், பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்களில் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளே இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி சேலையும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. தரமற்ற பொங்கல் தொகுப்புக்கு பதில் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் எனப் பொதுமக்கள் கூறுகின்றனர் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.